தமிழா உன் அடையாளம்???

   சுழன்று கொண்டிருக்கும் பூமி மனிதனை இடமாற்றவும் பின்னிற்கவில்லை. எங்கோ முகவரி இன்றிக் கிடந்தவனையும் முன்னோக்கி பயணம் செய்ய வைத்துள்ளது. கோபுரத்தில் இருந்தவனையும் கொட்டகைக்குள் தள்ளியுள்ளது. இருப்பினும் எந்த நிலைக்கு வந்தாலும் தம் உண்மையான நிலை தன் நிஜ அடையானத்தினை வெளிப்படுத்துவது நன்று என்பது எனது கருத்து. 

   ஏதோ வானத்திலிருந்து குதித்து தான்தான் எல்லாவற்றையும் கண்டுபிடித்தவன் போல் பாசாங்கு செய்கின்றது சில மனித ஜந்துக்கள். மதத்தில் சமயத்தில் சடங்கில் சம்பிரதாயத்தில் எல்லாம் வேற்றுமை காட்டும் சிலர் , அதுதான் தன் அடையாளம் எனக் கொள்ளும் சிலர்... சமீப காலமாக தமில் என்பதை அடையாளமாக்கிக் கொள்ள முனைவது சில வேளை சிரிக்கவும் வைக்கின்றது என்னை. 

  தமிழ் என்ற வார்த்தை உலகத்தில் பல அடையாளம்....

 தமிழ் .......கல்வி
 தமிழ் ......மானம்
 தமிழ் .....தொன்மை
 தமிழ் .....வெற்றி
 தமிழ் .....அன்பு
 தமிழ் .....வீரம்
 தமிழ் ....ஒழுக்கம்
 தமிழ் ....உயிர்....
 
     இது மட்டுமல்ல தமிழ் புதைக்கப்பட்ட, சிலரால் அழித்து கேவலப்படுத்தப்பட்ட, அதற்கும் மேல் விதைக்கப்பட்ட வித்து. எக்காலத்திலும் எந்த நேரத்திலும் தோன்றி வளரக் கூடியது. கடைசித் தமிழன் உள்ளவரை,உலகம் உள்ளவரை தமிழ் வாழும். 

தமிழ் என்று உச்சரிக்கப்பழகு... முதலில்.....

எச்சரிக்கை!!!!!

டினேஸ் திரு சந்தனா
12.10.2017


கருத்துகள்