நண்பன் ராம்கி....
புதிய முயற்சிகளுடன் முன்னேறத் துடிக்ககும் ஓர் இளைஞன்..
விரைவில் அவரது கவிப் படைப்புக்கள் புத்தகமாக வெளிவர உள்ளது...

அவர் கவிதையொன்று....

************************   கட்டில் உறவை
கரம் விட்டு ,
தொட்டில் உறவை
கைப்பற்றி ,
பனியோடு எழுந்து ,
பணிவிடைதனை
தொடங்கி விட்டடால்
ஓட்டமும் நடையுமாய்
தேயிலை
காட்டை அடைந்து
காட்டமாய் பேசும்
கங்காணிக்கு பணிந்து
காசி யாத்திரையாய்
மலையேறி இறங்குகிறாள்.
கால் கடுக்க வேலை செய்தும் குழந்தை பால் கணக்குக்கு வேதனம்
போதவில்லை
அடுக்கடுக்காய்
ஆசையிருந்தும்
இவள் வாழ்வில் மட்டும்
விடிவில்லை.

கருத்துகள்