நண்பனுடன் கைகோர்த்து....

    எதிர்வரும் 15.11.2017 அதாவது புதன்கிழமை நண்பன் முருகையா ராம்கியின் கவிதை நூலான  'சிறகுகளின் சப்தம்' தென் கழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட கலையரங்கில் தழிழ் இசை வட்டம் மூலம் பி.ப 1.00 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.

   ராம்கியை சுமார் இரண்டு வருடகாலத்திற்றகு மேலாகத் தெரியும் பல்கலையில் சீனியராக அறிமுகமானவர். ஆனால் எல்லோருடனும் இனிமையாகப் பேசிப்பழகும் பல சீனியருள் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார். மற்றவர்களை விட ஒரு வருடம் அதிகமாகப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடன் இலக்கிய விடயங்கள் சார்ந்து கலந்துரையாடக் கிடைத்தது.

நுவரெலியாவைச் சேர்ந்தவர் என்பதால் மலையகக் காற்றை சுவாசித்து காற்றில் வரும் களங்கத்தை கவிதை இலக்கியம் மூலம் வடிகட்டக நினைப்பவர். அதனால்தான் எதிர்ப்பு இலக்கியங்களை அதிகம் படடிப்பவராகவும்  படைப்பவராகவும் திழ்ந்ததுடன் இயற்கை நிகழ்வுகளை தனது குறிப்பேற்றி கூறும் தன்மை கொண்டவர். ஒலுவில் பல்கலைக்கழகத்தின் வாயிலில் சோளக்கடை போட்டு ஒரு பெண் இருந்தார். பல்கலைக்ழக விடுமுறை என்று தெரியாமல் அதிகமாக சோளங்குலைகளை அவித்து வைத்திருந்தாள். அந்தப் பெண் அது குறித்து வேதனை கொண்டாளோ தெரியவில்லை. ஆனால், ராம்கி தனது 'சோளக்கடைக்காரி ' என்னும் கவிதையில் அழகாகக் கூறினார்....

                                                           "  இவள் வீதியில்
சோளம் அவித்தால் தான்
சோறு அவியும்
அவள் வீட்டடுப்பில்
எப்போதும் போலவே
சோக முகத்;துடன்
சோள மூட்டையை
பற்றியபடி 
அன்றும் வந்தாள்
விடுமுறைக்காய் விடுதி
மூடப்பட்ட சேதி
அப்புறம் தான்
அவளுக்கு தெரிந்தது
உழைப்பின்றி சென்றவள்
உலை வைக்க
என்ன செய்திருப்பாளோ ?"



அவரது பல கவிதைகளை எனது குரலில் பதிவு செய்திருக்கின்றேன். அதிலே எனக்கு மிகப் பிடித்தது 'சிறகொடிந்த பறவை' என்பதாகும். கல்வியை பாதியில் கைவிட்ட ஒரு பெண்ணின் நிலையை அழகுறக் கூறினார். மேலும் அவரது கவிதையான 'விழியால் பேசும் பூவே' என்பதனை பாடலாகப் பாடியுள்ளேன். அதனை 15ம் திகதி வெளியிட உள்ளோம். மெல்லிசையுடன் சொல்லிகையும் இணைந்து கலந்தது அந்தப்பாடல். 

மேலும் இந்து மாமன்றத்தின் கலை விழா 'சம்பூர்ணா' இல் 'ஒலியூர் நாயகனே!'என்னும் இசைத்தட்துடானது வெளியிடப்பட்டது. அதிலே அவரது பாடலும் அடங்கியிருந்தது. மேலும் அவ்விசைத்தட்டில் உள்ள பாடல்களில் நானும் நண்பன் செல்வா மற்றும் புஸ்பராஜ் ஆகியோரும் பாடல்களை எழுதியிருந்தோம்.

 தென்கிழக்குப் பல்கலையில் குறிப்பிட்ட சில காலத்திற்குள் ஆரம்பிகக்பபட்டதுதான் தமிழ் இசை வட்டம். கலை கலாசாரப் பளிகளுடன் இலக்கியப் பணிகளையும் தொடர்கின்றது. அனைவரது பங்களிப்புடன் பல பரிணாமங்களைக் கொண்டு அது வளர்ச்சியடையும். 

இவ்வருடத்துடன் ராம்கியின் பட்டப்படிப்பு நிறைவடைகின்றது. ஆனால் எம் இலக்கியப் பணி இன்னும் தொடரும். 

மறக்காமல் அனைவரும் நூல் வெளியீட்டுக்கு வருகை தரவும்



**********நன்றி*****








கருத்துகள்